Latest

🙏 Pray for Sebastian Britto Breezlin 🙏

ரஷிய கடல் பகுதியில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 14 பேர் பலி, நமது ஊர் புத்தன்துறையை சேர்ந்த அண்ணன் சகாயராஜ் அவர்களின் மகன் செபாஸ்டின் பிரிட்டோ பெயர் மாயமானவர்கள் பட்டியலில் உள்ளது…உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்….மாயமான மகன் குறித்த உரிய தகவல்கள் கிடைக்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..அன்பு தம்பி இறைவன் அருளால் மீண்டு வர பிராத்திப்போம் 🙏

சரக்கு பெட்டக துறைமுகத்தை எதிர்த்து சங்குமுகத்தில் போராட்டம்,19/05/2018

சரக்கு பெட்டக மாற்று முனையத்திற்கு எதிராக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். சங்குத்துறை கடற்கரையில் மக்கள் அலை..9/05/2018 “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்  ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை” #அறம்வெல்லும் #பல்முகப்போராட்டம்

பாதம் கழுவும் சடங்கு நிகழ்ச்சி புகைப்படத்தொகுப்பு புத்தன்துறையில் நடைபெற்ற பாதம் கழுவும் சடங்கு

தவக்காலத்தில் இயேசு கிறிஸ்துவின் இறுதி நாளை நினைவு கூர்ந்து கொண்டாடுகின்ற ஒரு விழா பெரிய வாரம் அல்லது புனித வாரம் என்று அழைக்கப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வான இன்று பெரிய வியாழன், புனித வியாழன் எனப்படுகிறது. இயேசு இறப்பதற்கு முந்தைய நாள் தம் சீடர்கள் 12 பேரின் பாதங்களை கழுவி இரவு உணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் புனித வியாழன் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்திலும் …