Home / Article / பரதகுலம் வர்க்கம் #மத்தியேரன் #பேரன்

பரதகுலம் வர்க்கம் #மத்தியேரன் #பேரன்

பரதகுலம் வர்க்கம் #மத்தியேரன் #பேரன்

#மத்திபேரன் என்று கூறுவதும் சரியே

#குலம் #சூரியகுலம்

#கோத்திரம் #பரதர்

#சோழன் #படைத்தளபதி

வர்க்கம் வயது 2500 வருடங்கள்

இந்த வர்க்கம் ராஜாக்கள்மங்களம் துறையில் மற்றும் கூட்டபுளியில் இருக்கிறார்கள்

இவர்கள் பற்றி சங்க இலக்கிய குறிப்பு

எழினி என்ற குறுநில மன்னன் சோழனுக்கு அடிபணிய மருத்ததால்

மத்தி என்ற படைத்தளபதியை அனுப்பி அவனை பல்லை உடைத்து எடுத்து வந்ததை பற்றி கூறுகிறது இந்த பாடல்

அவன் கொண்டு வந்து பல்லை வெண்மணி என்ற கடற்கரை ஊரில் இருந்த கோட்டை கதவில் அந்த பல்லை தன் வெற்றிக்கு அடையாளமாக பதித்து வைத்தான்

அவ்வுர் கடற்கரையில் கல்நட்டினான்

என்கிறது இந்த பாடல்

இந்த மத்தியில் வம்சமே மத்தியேரன் பேயரன்

அகநானூறு 211 மாமூலனார்

கேளாய், எல்ல! தோழி! வாலிய
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
பறை கண்டன்ன பா அடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும்,
5
தண் மழை ஆலியின் தாஅய், உழவர்
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
10
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய,
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
15
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே

உரை – ஜான் மில்டன் பர்னாந்து

தோழி கேளாய் – ஏடி, தோழி! நான்கூறுவதனைக் கேட்பாயாக

சோழ மன்னனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து குறுநில மன்னர்கள் தத்தம் பணியாளர்களைக் கொண்டு பெரிய குழிகளைத் தோண்டி புதிய யானைகளைப் பிடிகும் முயற்ச்சியில் இடுபட்டனர். தொலைவில் வாழ்ந்த எழினி என்ற குறுநில அரசன் அதை செய்யவில்லை. கோபம் கொண்ட சோழன் வெண்மணி என்னும் துறை சேர்ந்த மத்தி என்ற பரதவ தலைவனை ஏவ . மத்தி எழினியை சிறைபிடித்து அவன் பல்லைப் பிடுங்கி வெண்மணியின் வலிமையான கோட்டைக் கதவில் பிறருக்கு பாடமாக இருக்க வேண்டும் என பல்லைப் பதித்து வைத்தான்.

தன் வெற்றியை காண்பிக்க அத்துறையில் கல் நட்டினான்

அந்த கல் உள்ள துறைமுக அலை அவன் புகழ் பாடுவது போல் ஆர்பரிக்கிறது

மற்றும் ஓர் குறிப்பு

அகநானூறு – 226 பரணர்

உணர்குவென் அல்லென்; உரையல்நின் மாயம்;நாணிலை மன்ற- யாணர் ஊர!-
அகலுள் ஆங்கண் அம்பகை மடிவைக்,
குறுந்தொடி, மகளிர் குரூஉப்புனல் முனையின்,
பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக் 5
கரந்தைஅம் செறுவின் வெண்குருகு ஓப்பும்,
வல்வில் எறுழ்த்தோள் பரதவர் கோமான்,
பல்வேல் மத்தி கழாஅர் முன்துறை,
நெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய்

உரை – ஜான் மில்டன் பர்னாந்து

தங்கள் ஊர் பெருமை சொல்லுவது

எங்கள் ( உங்கள்) ஊரில் ஆண்டுதோறும் புதுவரவாய் வரும் நீ பொய் சொல்லி எங்களை வஞ்சிக்க நினைக்காதே. அவற்றை நாங்கள் நம்பவில்லை. உனக்கு அதுபற்றி வெட்கமும் இல்லை.

வேல் படையை உடைய மத்தி என்ற பரதவர் தலைவனின் முன் துறை

ஆகவே உன் தில்லாலங்கடி வேலை எங்களிடம் வேண்டாம் என்கிறது இந்த பாடல்

ஆக மத்தியேரான் என்றால் மிக சிறப்பு

Article by Mr John Milton