Home / Article / சங்கஇலக்கியமும் பரதகுலமும்

சங்கஇலக்கியமும் பரதகுலமும்

சங்கஇலக்கியமும் பரதகுலமும்

அகநானூறு – 210

குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்எறியுளி பொருத ஏமுறு பெருமீன்
புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட
விசும்புஅணி வில்லின் போகி, பசும்பிசிர்த்
திரைபயில் அழுவம் உழக்கி, உரனழிந்து, 5
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
பானாள் இரவில்நம், பணைத்தோள் உள்ளி,
தானிவண் வந்த காலை, நம்ஊர்க்
கானலம் பெருந்துறைக் கவின்பா ராட்டி,
ஆனாது புகழ்ந்திசி னோனே; இனித்தன், 10
சாயல் மார்பின் பாயல் மாற்றிக்,
‘கைதைஅம் படுசினைக் கடுந்தேர் விலங்கச்
செலவுஅரிது என்னும்’ என்பது
பலகேட் டனமால் – தோழி !- நாமே

உரை – ஜான் மில்டன் பர்னாந்து

பரதகுல பரதவர்கள் மீன் பிடிக்கும் போது இரண்டு ஆயுதங்களை பயன்படுத்துவார்கள்

ஒன்றின் பெயர் #எறிஉளி மற்ற ஒன்று #மண்டூக்

எறிஉளி என்பது மீனை தூரமாக பார்த்தால் எறிந்து பிடிக்கும் கருவி. மண்டூக் என்றால் பெரிய மீனை கடலில் இருந்து வள்ளத்தில் ஏற்ற பயன்படும் கொளுவி

200 கிலோவிற்கு மேல் உள்ள பெரிய வெள்ளை சுறாவை பரதகுலம் புலால் என்றே அழைப்போம்

இனிபடலுக்கு வருவோம்

தோழி! பரதகுல பரதவர் கடலில் எறிஉளி என்னும் கூர்மையான வேலை வீசிக் பெரிய புலாலை ( பெரிய சுறாவை) கொள்கிறார்கள்.

இது எப்படி இருக்கும் என்றால் வானத்தில் தோன்றும் வானவில் போல எறிஉளியால் குத்துபட்ட புலாலின் ரத்தம் கடலின் நிறத்தை மாற்றிவிடும்

பிடித்த மீனை ஏற்றிக் கொண்டு வள்ளம் பாண்டியன் படைப்பிரிவாகிய விசும்பு அணி விடும் வில்லின் அம்புபோல் விரைந்து துறைமுகத்தை அடைவர்.

நள்ளிரவில் துறைமுகத்திற்கு வரும் பரதகுல பரதவர் துறைவன் அங்கே உள்ள சோலையில் நீங்கள் இருவரும் பேசி மகிழ்வீர்கள். அப்போது நமது துறைமுகத்தையும் சோலையையும் நாள்தோறும் பாராட்டி புகழ்வார்.

பரதகுல தலைவன் துறைவன் இப்போது வருவதில்லை அவர் மென்மையான மார்பில் சாய்து துயில் பெறுவதை மாற்றிவிட்டார்.

அதற்கு காரணம் #பரதகுல #தலைவன் #தேரில் #வரும்போதுநமது துறைமுகத்தின் தாழைச் செடியின் தாழ்ந்த கிளைகள் தனது தேர்ச்சகரத்தை தடுக்கிறது என்று ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார். என்கிறாள் தோழி

பரதகுல துறைமுக தலைவன் துறைவனே தேரில் தான் வருவான் இதுதான் பரதகுலம்

பரதகுல மக்களே உன் வரலாற்றை காப்பாற்று

திமில் ஓடிய ஓட்டை எவ்வளவு அழகாக புகழ்கிறார் புலவர் உலோச்சனார்

1947ல் எடுக்கப்பட்டது