Home / Article / இராட்சச அறிவிப்புகளும், இராட்சத அலைகளும்

இராட்சச அறிவிப்புகளும், இராட்சத அலைகளும்

இராட்சச அறிவிப்புகளும், இராட்சத அலைகளும்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் கடல் அதிகம் வெப்பமடையும்.அதிக வெப்பத்தினால் ஏற்படும் சலனம் காரணமாக நீவாடு (நீரோட்டம்) மாறி மாறி வருவதால் கடல் ஏப்ரல் மாதத்தில் வாங்கலாக(கடலில் பெரிய அலைகள் தோன்றுதல் ) இருக்கும்.மே மாத நடுவில் பருவக்காற்று வீச ஆரம்பிக்கும்.அப்பொழுது கடல் வரளமாக (கடலில் சிறிய அலைகள் தோன்றுதல் ) இருக்கும்.இது வருடா வருடம் நடக்கும் இயல்பான நிகழ்வு.

ஏப்ரல் மாதத்தில் வெள்ளம் கரை கடந்து குளமாக தேங்கும்.கடலோடிகள் யாரும் அலறி ஊரை விட்டு ஓடுவதில்லை.கடற்புற சிறுவர்கள் மூக்கு பொடி மட்டையில் கப்பல் செய்து குளமாக தேங்கும் கடல் நீரில் விட்டு விளையாடுவர்.நானும் என் நண்பர்களுடன் அப்படி கூட்டப்புளியிலும்,இடிந்தகரையில் விளையாடி இருக்கிறேன்.இடிந்தகரை கடலோடிகள் கரைக்கடக்கும் வெள்ளத்தை “பொடுத்தடை வெள்ளம் ” என்றே அழைப்பர்.

இவ்வாறான ஒரு இயல்பான நிகழ்வை கடந்த இரு தினங்களாக ஏதோ சுனாமி வருவது போல் அறிவிப்பு செய்து ,கடலில் இராட்சத அலைகள் தோன்றும் என்று சொல்லி,கடலோடிகளை மீன் பிடிக்க அனுமதிக்கவில்லை.ஆனால் பருவ நிலையில் எந்த மாற்றமும் இல்லை.இடிந்தகரை கடல் இந்த அறிவிப்புகள் பற்றி ஏதும் அறியாமல் அமைதியாகவே இருந்தது.இதற்கு ஆதாரமாக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைத்துள்ளேன்.

பருவ நிலை மாற்றங்களை 100% துல்லியமாக கணிக்க முடியாது தான்.ஆனால் முழுக்க தவறாக இருந்தால் , அப்படி ஒரு கணிப்பு நமக்கு தேவையா?

Author:

Francis Xavier Vasan